Thursday 23 July 2015

ஊழல்களை உரக்கச் சொல்லும் கிருமி Thursday 23 July 2015

சென்னை: தமிழ் சினிமாவில் கதை வித்தியாசமாக இருக்கிறதோ இல்லையோ படத்தின் பெயர்களில் எப்படியாவது வித்தியாசம் காட்டி விடுகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் படம் கிருமி. படத்தின் தலைப்பைப் பார்த்ததும் இது கண்டிப்பாக மருத்துவம் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்று எண்ணி விடாதீர்கள், ஊழல் துறையில் இருக்கும் கிருமிகளைப் பற்றிக் கூறும் படமாம். நாயகனாக மதயானைக் கூட்டம் படத்தில் ஓவியாவை உருகி உருகி காதலித்த கதிரும், நாயகியாக இனிது இனிது படத்தின் மூலம் அறிமுகமான ரேஷ்மி மேனனும் நடித்திருக்கின்றனர்.


கிருமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி " கிருமி படம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது, படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில் "படத்தில் இடம்பெறும் காட்சிகள் மிகவும் சாதாரணமாக நடப்பது போல உள்ளது, ஆனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்ப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் விதமாக எடுக்கப் பட்டிருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு, இசை, காட்சிகள் எல்லாமே மிகவும் நன்றாக அமைந்து இருக்கின்றன. படம் கண்டிப்பாக ரசிகர்களைக் கவரும்" என்று வாழ்த்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.

உறுமீன் படத்தின் மூலம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த நடிகை ரேஷ்மி மேனன் " இதுவரை நான் நடித்த படங்களிலேயே கிருமி ஒரு வித்தியாசமான படம். கண்டிப்பாக இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும்" என்று கூறியிருக்கிறார்.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கதிர் சின்ன சின்ன குறும்புத் தனங்கள் செய்யும் பேர்வழியாக நடித்திருக்கிறார், விளையாட்டுக்காக ஹீரோ செய்யும் குறும்புகள் அவனுக்கு எத்தகைய பாதிப்பைக் கொண்டு வருகிறது என்பதை சொல்லும் படம்தான் கிருமி.


கிருமி திரைப்படம் நாட்டில் அதிகரித்து வரும் லஞ்ச, லாவண்யங்களைப் பற்றி பேசும் படம் என்று கூறுகிறார்கள். காவல் துறையின் அன்றாட விஷயங்களில் கலந்திருக்கும் ஊழலைப் பற்றித் தோலுரிக்கும் விதமாக படத்தை எடுத்திருக்கின்றார் இயக்குநர் அனு சரண்.

ரஜினியிடம் உதவியாளராக இருந்த ஜெயராமன் தனது நண்பர் ஜெயரமனுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்த அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்திற்குஇசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் கே. நாட்டில் லஞ்சத்தை ஒழிக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கும் கிருமி வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Similar To "ஊழல்களை உரக்கச் சொல்லும் கிருமி"


Contact Form

Name

Email *

Message *