Wednesday 22 July 2015

பிரபல தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் மரணம்! Wednesday 22 July 2015

சென்னை: உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பிரபல தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 63. தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்தவர் அ செ இப்ராகிம் ராவுத்தர். இவரது தமிழன்னை சினி கிரியேஷன்ஸ் மூலம் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், தாலாட்டுப் பாடவா, பூந்தோட்டக் காவல்காரன், பரதன், தாய் நாடு உள்ளிட்ட ஏராளமான படங்களைத் தயாரித்தார். தொன்னூறுகளில் தமிழ் சினிமாவின் பெரிய வெற்றிப் படங்களைத் தந்தவர்கள் இப்ராகிம் ராவுத்தரும் அவர் நண்பரான விஜயகாந்தும்.
 
இரண்டு முகம், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் போன்ற படங்களை அவர் சமீப ஆண்டுகளில் தயாரித்தார். நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துடன் மிக நெருக்கமான நட்பு கொண்டவர் இப்ராகிம் ராவுத்தர். தான் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், தன் நண்பன் விஜயகாந்துக்கு திருமணம் செய்து வைத்தவர் ராவுத்தர். கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இருதயம் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தன் நண்பன் இப்ராகிம் ராவுத்தரை நேரில் பார்த்த விஜயகாந்த், கண்ணீர்விட்டு கதறி அழுது, நலம் பெற பிரார்த்தனை செய்தார்.
 
இந்த நிலையில் இன்று காலை உடல்நிலை மிக மோசமடைந்து, மரணமடைந்தார் இப்ராகிம் ராவுத்தர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராகப் பதவி வகித்த இப்ராகிம் ராவுத்தர், அரசியலில் முதலில் தமாகாவில் இணைந்தார். மூப்பனார் மறைவுக்குப் பிறகு அரசியலில் ஆர்வமின்றி இருந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.

Similar To "பிரபல தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் மரணம்!"


Contact Form

Name

Email *

Message *