Thursday 23 July 2015

"கின்னசில்" இணைந்தது பாகுபலி போஸ்டர்! Thursday 23 July 2015

சென்னை: உலகிலேயே மிகப்பெரிய போஸ்டர் என்ற பெருமையுடன் கின்னசில் நுழைந்து சாதனை படைத்துள்ளது பாகுபலி போஸ்டர். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் ஏராளமான தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த படம் பாகுபலி. கடந்த ஜூலை 10 ம் தேதி திரைக்கு வந்த பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் வசூலில் ஒரு புதிய வரலாற்றையே படைத்து வருகிறது, படம் வெளிவந்து இன்றோடு 3 வாரங்கள் ஆகின்றன. இதுவரை உலகம் முழுவதும் பாகுபலி வசூலித்த தொகை 360 கோடியைத் தாண்டியுள்ளது. இந்தியத் திரை வரலாற்றில் வேறு எந்தத் திரைப்படங்களும் செய்யாத சாதனை இது, இந்நிலையில் பாகுபலி படக்குழுவினருக்கு உலக அளவில் மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது உலகத்திலேயே மிகப்பெரிய பட போஸ்டர் என்று கின்னசில் இடம் பெற்றுள்ளது பாகுபலி போஸ்டர், பல்வேறு மொழிகளில் பாகுபலி படம் மொழிமாற்றம் செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.


தென்னிந்திய மொழிகளில் வெளியான பாகுபலி திரைப்படம் மலையாள மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. மலையாள உலகில் பாகுபலி படத்தின் பாடல்களை அறிமுகம் செய்யும் விழா நடந்த போது கேரளாவைச் சேர்ந்த, குளோபல் ஐக்கிய ஊடக நிறுவனம் பாகுபலி படத்தின் போஸ்டர்களை வடிவமைத்தது.

போஸ்டர் அறிமுகம் செய்தபோதே இது கண்டிப்பாக கின்னஸில் இடம்பெறும் என்று அனைவரும் கருத்துத் தெரிவித்து இருந்தனர், எல்லோரின் கணிப்புகளையும் உண்மையாக்குவது போல தற்போது கின்னஸில் இடம்பிடித்து விட்டது இந்தப் போஸ்டர்.

இந்தப் போஸ்டரை உருவாக்குவதற்காக சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் 3 நாள் இரவு பகலாக உழைத்து இருக்கின்றனர்,இதற்கு முன்பு கின்னஸில் இடம்பெற்ற போஸ்டர் 50,687.25 சதுர அடியைக் கொண்டது, தற்போது அந்த சாதனையை முறியடித்து கின்னஸில் இடம்பெற்ற பாகுபலி போஸ்டரின் நீளம் 51,598.21 சதுர அடியாகும்.

ஏற்கனவே படம் வசூல் மழையை பொழிந்து வரும் நிலையில் தற்போது கின்னஸ் அங்கீகாரமும் கிடைத்திருப்பதால் போஸ்டரை உருவாக்கிய குளோபல் ஐக்கிய ஊடக நிறுவனம் மற்றும் பாகுபலி படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இயக்குநர் ராஜமௌலி இந்த சாதனையை அறிந்ததும் இந்த சாதனையைப் படைத்த நிறுவனத்திற்கும் மற்றும்அதன் குழுவினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்துள்ளார். "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் அதை வங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் ( பாகுபலி) சேரும்" தற்போது இயக்குநர் ராஜமௌலிக்கு பொருத்தமான பாடல் இதுதான்.

Similar To ""கின்னசில்" இணைந்தது பாகுபலி போஸ்டர்!"


Contact Form

Name

Email *

Message *