Wednesday 7 September 2016

Films on India Wednesday 7 September 2016

Films on India




Thursday 23 July 2015

ஆவிகுமார் என் கேரியரை மாற்றும்! - நம்பிக்கையில் உதயா Thursday 23 July 2015

திருநெல்வேலி படத்தில் நடிகராக உதயா அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. பிரபல தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகன் என்றாலும், சொந்த முயற்சியில் ஷக்கலக்க பேபி, ராரா என சில படங்களில் நடித்தார். இப்போது இவரது நடிப்பில் ‘ஆவிகுமார்' என்ற படம் வரவிருக்கிறது. இதில் உதயாவிற்கு ஜோடியாக கனிகா திவாரி நடித்துள்ளார். இவருடன் நாசர், ஜெகன், மனோபாலா, பாவா லட்சுமணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். நாளை மறுநாள் வெளியாகும் இந்தப் படம் குறித்து உதயா கூறுகையில், "இந்த 15 ஆண்டுகளில் 9 படங்களில் நடித்துவிட்டேன். பெரும் போராட்டமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.


இந்த ‘ஆவிகுமார்' ஒரு ஜாலி படம். என்னுடைய 10வது படமாக வெளியாகிறது. நான் நடித்த படங்களிலேயே இப்படம் தான் அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. இப்படம் 170 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. என் வாழ்க்கையில் இத்தனை அரங்குகளில் என் படம் இப்போதுதான் முதல் முறையாக வெளியாகிறது.

இப்படம் எல்லாரையும் பயமுறுத்தக்கூடிய படமாக இருக்காது. எல்லாரும் மகிழ்ச்சியாக குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இருக்கும். பிரம்மாண்டமாக தயாரித்து இப்படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்கள் ஸ்ரீதர் நாராயணன், எஸ்.சிவசரவணன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சினிமாவில் நுழையும்போது நிறைய பேர் வந்தாங்க. அதில் பல பேர் காணாமல் போயிட்டாங்க. 15 வருடமாக சினிமாவில் நான் இருக்கிறேன் என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. ‘ஆவிகுமார்' வெளியான பிறகு என்னுடைய இமேஜ் மாறும்.

‘ஆவிகுமார்' படத்திற்கு விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் தேவா இருவரும் இசையமைத்திருக்கிறார்கள். நான் ஹீரோவாக மட்டும் நடிக்க மாட்டேன். பெரிய நடிகர்கள் படத்தில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் நடிப்பேன். வில்லன் வேடம் கூட ஓகேதான்.

இனிமேல் வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க முடிவு செய்துள்ளேன். நல்ல கதைகளை கேட்டு வருகிறேன். ‘காக்கா முட்டை' போன்ற நல்ல கதைகள் கொண்ட படங்களையும் தயாரிக்க இருக்கிறேன்," என்றார்.

இப்ராகிம் ராவுத்தர் உடல் அடக்கம்... திரையுலகினர் அஞ்சலி

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் உடல் இன்று சாலிகிராமம் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார் இப்ராகிம் ராவுத்தர். அவரது உடல் வடபழனி நூறடி சாலையில் உள்ள ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரையுலகினர் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் விஷால், மன்சூர்அலிகான், கருணாஸ், சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ., இயக்குநர் செந்தில்நாதன், கலைப்புலி சேகரன், ஆனந்தராஜ், தயாரிப்பாளர்கள் கே.ஆர்., ஏ.எல்.அழகப்பன், முரளிதரன், கே.ராஜன், ஏ.என்.சுந்தரரேசன், சவுந்தர், கப்பார், சவுந்தர் முருகன், துரைராஜ், பெப்சி விஜயன், அருண்பாண்டியன், மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்காரவேலன் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். பகல் 12 மணிக்கு இப்ராகிம் ராவுத்தர் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சாலி கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆரண்யம்... சாலக்குடி காடு முதல் தாய்லாந்து காடுவரை!


காடும் காடு சார்ந்த இடத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள காதல் படம் 'ஆரண்யம்'. இப்படத்தை 'ஆஹா ஓஹோ புரொடக்ஷன்ஸ் 'சார்பில் ராம், சுபாஷ், தினேஷ், நானக் என நான்கு நண்பர்கள் இணைந்து தயாரித்து உள்ளனர். புதுமுகம் ராம், நீரஜா ஷாஜி, இளவரசு, சிங்கமுத்து,ஸ்ரீஹேமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
குபேர்ஜி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு 'அன்னக்கொடி' புகழ் சாலை சகாதேவன், இசை எஸ்.ஆர்.ராம். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் குபேர்ஜி. பேசுகையில், "நான் யாரிடமும் உதவியாளராகப் பணிபுரியவில்லை. படங்கள் பார்த்தும் பல விதமான சினிமா நண்பர்கள் மூலம் பழகிய அனுபவங்கள் பெற்றும் சினிமா கற்றவன். இப்படம் காடு சார்ந்த காதல் கதை. புதிய களம். நிச்சயம் இப்படம் புதிய அனுபவமாக இருக்கும். நண்பர்களாக இணைந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். 'காதலிக்கநேரமில்லை' படத்தில் நாகேஷ் சொல்லும் ஆஹா ஓஹோ புரொடக்ஷன்ஸ் நினைவாக எங்கள் கம்பெனிக்கு அதையே பெயராக வைத்தோம். படம் காதல் கதைதான் என்றாலும் இப்படம் உருவான விதம் கேட்டால் அது எங்கள் நட்பின் கதையாக இருக்கும். என்மேல் நம்பிக்கை வைத்து இப்படத்தைக் கொடுத்தார்கள். சாலக்குடி காடு முதல் தாய்லாந்து காடுவரை போய் 60 நாட்களில் படத்தை முடித்து இருக்கிறோம். புதியதை என்றும் வரவேற்கும் ரசிகர்கள் இதையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்,'' என்றார்.
கவிஞர் பா.விஜய் பேசும்போது, "இப்போதெல்லாம் பாடலாசிரியர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. இந்நிலையில் என்னிடம் உதவியாளராக இருந்த மீனாட்சி சுந்தரம் இதில் பாடலாசிரியராக அறிமுகமாகி 4 பாடல்களை எழுதி இருக்கிறார். அவருக்கு வாய்ப்பளித்ததற்கு படக்குழுவுக்கு நன்றி. இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்'', என்றார். விழாவில் நாயகனும் ஒரு தயாரிப்பாளருமான ராம், நாயகி நீரஜா, நடிகர் 'வழக்கு எண் ஸ்ரீ, தயாரிப்பாளர் சுபாஷ், பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், ஒளிப்பதிவாளர் சாலை சகாதேவன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

குஷி 2-ம் பாகம் - எஸ்ஜே சூர்யா ரெடி..

விஜய்யும் எஸ் ஜே சூர்யாவும் மீண்டும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்து 2000-ம் ஆண்டில் வெளியான படம் குஷி. பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
அதன் பிறகு விஜய்யுடம் எஸ்ஜே சூர்யாவும் இன்னொரு படத்தில் இணையவிருந்தனர். அந்தப் படத்தின் தலைப்பு புலி. ஆல்பட் தியேட்டரில் வைத்து தலைப்பு அறிவிக்கப்பட்டு, பட வேலைகள் நடந்து வந்த நிலையில், திடீரென படம் நிறுத்தப்பட்டதாக அறிவித்தார்கள். அதே வேகத்தோடு தெலுங்குக்குப் போன எஸ்ஜே சூர்யா, பவன் கல்யானை வைத்து கொமரம் புலி என்ற படத்தை எடுத்தார். பின்னர் புலி என்ற தலைப்பிலேயே தெலுங்கில் ரிலீஸ் செய்தார்.

அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து விஜய் கேட்டதற்காக தமிழில் புலி தலைப்பை விட்டுக் கொடுத்தார். அதுதான் இப்போது சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியாகும் படத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.

தற்போது குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. 2-ம் பாகத்துக்கான கதை, திரைக்கதையை எஸ்.ஜே. சூர்யா உருவாக்கியுள்ளாராம்.

விஜய்யிடமும் அந்த கதையை சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. விஜய்யிடம் இருந்து சம்மதம் கிடைத்ததும் பட வேளைகளை துவங்க திட்டமிட்டு உள்ளார்.

விஜய் தற்போது ‘புலி' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இதன் பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. ‘குஷி' 2-ம் பாகத்தில் நடிப்பது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை விஜய் ஒப்புக் கொண்டால், இது அவரது 60 -வது படமாக அமையும். படத்துக்கு கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வில் எஸ்.ஜே. சூர்யா தீவிரமாக உள்ளார்.

பாகுபலி படத்திற்கு எதிர்ப்பு - 2 தியேட்டர்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை: மதுரையில் இன்று பாகுபலி திரையிடப்பட்டுள்ள சினிமா தியேட்டரில் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக புரட்சிப்புலிகள் அமைப்பை சேர்ந்த 6 பேர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். மதுரையில் நத்தம் சாலையில் உள்ள தமிழ், ஜெயா என்ற இரண்டு திரையரங்குகளில் பாகுபலி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் திரையரங்கு மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதில் திரையரங்கில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
பாகுபலி படத்தில் அருந்ததியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வசனங்கள் இடம்பெற்று உள்ளதாகவும் அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்றும் புகார் கூறி, மதுரையில் புரட்சிப்புலிகள் அமைப்பு மற்றும் ஆதித் தமிழர் கட்சியினர் சில தினங்களுக்கு முன்பு, படம் வெளியான தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், நத்தம் ரோட்டில் உள்ள பாகுபலி படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் இன்று காலை, 5 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் தியேட்டரின் காம்பவுண்டு சுவர் சிறிய அளவில் சேதம் அடைந்தது.
நல்லவேளையாக அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பாகுபலி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல்குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய 6 கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புரட்சிப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க...

சென்னை: ஆர்யா - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தில் இடம்பெற்ற லக்கா மாட்டிகிச்சு பாடல் இன்று வெளியானது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்குநர் ராஜேஷ், நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் மீண்டும் இணைந்திருக்கும் படம் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க.


பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று இமானின் இசையில் படத்தில் இடம்பெற்ற லக்கா மாட்டிகிச்சு பாடல் வெளியாகி உள்ளது, சோனி மியூசிக் வெளியிட்டுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பெண்களைத் திட்டி வரும் பாடல்களுக்கு மத்தியில் பெண்களைப் பாராட்டி இந்த பாடல் வரிகள் அமைந்து இருக்கின்றன, கானா ஜெகன் செந்தில் தாஸ் மற்றும் பழனியம்மாள் என்ற 3 பாடகர்கள் இந்தப் பாடலின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி உள்ளனர். இந்தப் பாடல் நன்றாக இருப்பதாக பாடலைக் கேட்ட ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

Contact Form

Name

Email *

Message *